இந்திய – சீன எல்லை பதற்றம் தனிகிறது

இருநாட்டு ராணுவமும் பின்வாங்குகிறதா?

இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சு வார்த்தைகளில் ஆரோக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நிலைகளில் இருந்தும் இந்திய, சீன ராணுவத்தினர் பின் வாங்கி வருவதாக செய்தி வெளியாகி வருகிறது.

இந்திய – சீன எல்லையில் பேச்சுவார்த்தை
இரு நாட்டு ராணுவத்தினரும் பேட்ரோலிங் பாய்ண்ட் 14 (கால்வன்), பேட்ரோலிங் பாய்ண்ட் 15, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட லடாக்கின் பகுதிகளில் பேச்சுவார்த்தையைத் தொடர உள்ளதாக இருநாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில நாட்களில் இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது.

ஜூன் ஆறாம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கால்வன் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா தங்கள் நாட்டு ராணுவத்தினரை தங்கள் எல்லைக்குள் அழைத்துக் கொண்டதை தொடர்ந்து இந்திய ராணுவமும் தங்கள் ராணுவத்தினரில் சிலரையும், சில ராணுவ வாகனங்களையும் அந்தப் பகுதிகளிலிருந்து இந்திய எல்லைக்கு உள்ளே அழைத்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் படைப்பிரிவுகளின் கமாண்டர் மட்டத்தில் நடைபெறுவதாகவும் அவர்கள் ஹாட்லைன் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ள செய்தி கூறுகிறது.

சீன ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவத்தின் குழுக்கள் ஏற்கனவே சுஷூல் பகுதியில் உள்ளனர்.

பேச்சுவார்த்தை தொடர்பாக ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் சீன, இந்திய எல்லை ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்பது உறுதி. இந்தப் போர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா? ஒத்த கருத்தோடு நிரந்த த் தீர்வுக்கு வித்திட்டுள்ளதா? என்பது இருநாட்டு அரசுகளின் இராஜ தந்திர நகர்வுகளைப் பொறுத்தே அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here