கறுப்புத்திரையில் எடைக் கருவிகள்

வெகு நீண்ட நாட்களாகவே மக்கள் ஒரு விஷயத்தில் கூடுதல் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது.

கடைகளில் பொருட்கள் வாங்கும்போது எடைக்கருவிகளில் சரியான எடை இல்லை என்ற சந்தேகம் வலுவாகி வருகிறது.

இரவுச் சந்தைகளில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் நடக்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக பல வாடிக்கையாளர்கள் சந்தேகப்படுகின்றனர். கொரோனா நுழைந்துவிட்டது. அதனால் மக்கள் கவனம் திசை மாறிவிட்டது.

இப்போது இரவுச்சந்தைகளுக்கு அனுமதி கிடைத்துவிட்டன. எடைக்கருவிகள் செயலிழந்திருக்கலாம்.

கடைகளில் வியாபாரத் தளங்களில் பயன்படுத்தப்படும் எடைக்கருவிகளில் நம்பகத்தன்மை குறையும் சந்தேகம் அதிகமாகிவருகிறது.

சில கடைகளில், வணிகத்தளங்களில் பயன்படுத்தப்படும் எடைக்கருவிகள் தரமற்றவையாக இருக்கக் கூடும். இவை பரிசீலித்து முத்திரையிடப்படாத போலியானவையாக இருக்கும் என்ற ஐயப்பாடும் அதிகமாகியிருக்கிறது.

எடைக் கருவிகளின்மீதான நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. விலையேற்றத்தால் தடுமாறும் மக்கள் வாங்கும் பொருட்களின் எடையிலும் ஏமாற்றப்படக்கூடாது.

வெகு நீண்ட நாட்களாகவே பரிசோதனை செய்யப்படாமல் இருக்கலாம் என்பதால் இதற்கான நடவடிக்கையோடு, நிறுவையில் மாற்று எடைக்கருவிகளை பயன்படுத்தும் தகிடுதத்த வித்தைகளையும் விற்பனையாளர்கள் கையாளக்கூடும்.

வாங்கும் பல பொருட்களில் எடை குறைவாக இருப்பதை உணரப்படுகிறது. மூட்டைகளாகக் விற்கப்படும் பல பொருட்களில் எடைக்காக தண்ணீர் தெளிக்கப்படுகிறது. பல மூட்டைகளில் பொருட்கள் உருவப்படுகிறன. பல வகைகளில் பயனீட்டாளர்களை ஏமாற்றுவதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் கடைக்காரர்களின் கறுப்பு முகங்களின் திரை விலகவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here