2021 வரவு செலவுத் திட்டம்: நவம்பர் 6ஆம் தேதி தாக்கல்

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 6ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிஃப் முகமட் யுசோப் தெரிவித்தார்.

முன்னதாக அக்டோபர் 2ஆம் தேதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு 12ஆவது மலேசிய திட்டத்திற்கான தாக்கல் வரும் ஆகஸ்டு 6ஆம் தேதியில் நடைபெறும். தற்போது கோவிட் நோய் தொற்று காரணத்தால் அது வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இத்திட்டத்தின் தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான ஆய்வு, கலந்தாலோசனை ஆகியவை மேற்கொள்ளப்படலாம் என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் 2ஆம் தவணை நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 23 தொடங்கி ஆகஸ்டு 27ஆம் தேதி வரை நடைபெறும். மூன்றாவது தவணை நவம்பர் 2ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here