ஜூலை 1 முதல் பாலர்பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி

பாலர்ப்பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்படலாம் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

பாலர் பள்ளிகளுக்கான எஸ்ஓபி குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட எஸ்ஓபிக்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புக் கொண்டுள்ளது.

எஸ்ஓபியை விரைவில் அமைச்சகம் அறிவிக்கும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

கல்வி அமைச்சின் கீழ் 6,216 பாலர் பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7,887 தனியார் பாலர் பள்ளிகள், ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் 1,781 மற்றும் சமூக மேம்பாட்டு துறையின் கீழ் 8,530 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here