மீண்டும் பிரதமராக வருவதற்கு கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை துன் டாக்டர் மகாதீர் சந்தித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக துன் மகாதீரின் முன்னாள் அரசியல் செயலாளர் செனட்டர் ஸாஹிட் மாட் அரிப் கூறினார்.
நேற்று செனட்டராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.
துன் மகாதீர் முகமது கெஅடிலான் கட்சித் தலைமையகத்திற்குச் சென்று அங்கு அன்வாரைச் சந்தித்திருக்கிறார்.
தங்களிடம் போதுமான ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாத பட்சத்தில் பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். துன் மகாதீரின் இந்தச் செயல் தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்து கட்சி வெளியேறுவதில் முக்கியப் பங்காற்றியவர்களுள் துன் மகாதீரின் முன்னாள் செயலாளரான இவரும் ஒருவராவார்.
துன் மகாதீரின் பலமிக்க நபராக விளங்கிய இவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பதவியேற்கக்கூடாது என்பதில் பின்னணயில் இருந்து வேலை செய்தவர்களுள் இவரும் அடங்குவார்.