அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தை தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். இப்படம் சூப்பர் ஹிட்டாகி உலகம் முழுவதும் பெரும் வசூலை வாரி குவித்தது.
இந்த நிலையில் சத்யஜோதி தியாகராஜன் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக தேர்வாகியுள்ளார். முன்னதாக இவர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதவி குறித்து டி.ஜி.தியாகராஜன் கூறியபோது, இந்த பதவி கிடைத்தது எனக்கு எதிர்பாராத ஒன்றாகவும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கிறது. சவாலான பொறுப்பை சரியாக செய்து முடிப்பேன். என்னைத் தேர்வு செய்து இந்த பதவியை அளித்த இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.