கவிஞர் சினேகன் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் புதிய முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார். சினேகம் டாக்ஸ் என்ற புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் சினேகன். இது குறித்து அவர் கூறும்போது, உங்களின் பேரன்போடு பல்வேறு பாதைகளில் பயணித்து கொண்டிருக்கிறேன்.
அதன் தொடர்ச்சியாக இதுவரை யாரும் அறியாத என்னுடைய இன்னும் பல முகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக சினேகம் டாக்ஸ் என்ற புதிய யூடியூப் சேனலை ஜூன் 23-ம் தேதி தொடங்க இருக்கிறேன். இதில் என் படைப்புகளுக்கு பின்னாலும், அரசியல் பயணங்களுக்கு பின்னாலும், வாழ்வியலுக்கு பின்னாலும் மறைந்துகிடக்கும் ஏராளமான ரகசியங்களையும் சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், நல்ல தலைவர்கள் போன்றோர்களின் கருத்துக்களையும் சொல்லப்படாத வரலாறுகளையும் நம் பண்பாட்டு கூறுகளையும் மத இன மொழி பேதமின்றி பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் அன்பையும் வழங்குங்கள் என்றார்.