வீட்டுக்கு ஆதாரம் மின்சாரம்

மூன்று மாதங்கள் வரை யாரும் மின்சாரம் பற்றிக் கவலைப்படவில்லை. கவலையெல்லாம் கொரோனா மீதுதான் இருந்தது. அதனால் மின்சாரம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. கவலைப்படாமல் இருந்தற்கு மின் கட்டணக்கழிவுகள் என்பது ஒரு காரணமாக  இருந்தது. அதனால் கவலைப்படாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தினார்கள்.

மூன்று மாதத்திற்குப்பிறகு எப்போது மின் கட்டணபில் வரும் என்று எதிர்பார்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் பில்லோடு இணைக்கப்பட்டிருந்தது.  அதில் மாதத்தவணையில் எவ்வளவு கட்ட வேண்டும் என்ற குறிப்பும் இருக்கிறது.

இந்த மூன்று மாதங்களில் மின் பயன்பாடு அதிகரிப்பு என்பது மக்கள் விரும்பியது அல்ல, அரசின் ஆணையை மக்கள் கடைப்பிடித்தனர் என்பதுதான் காரணம். இப்படிச் செய்வதற்கு மக்களுக்கு எந்தக்கடப்பாடும் இல்லை. இது அரசின் ஆணை என்பதால் அதை ஏற்கவேண்டிய கடப்பாட்டு உணர்வோடுதான் அதற்கு இணங்கினர்.

ஒவ்வொருமாதமும் சராசரி 20 முதல் 50 விழுக்காடுவரை மின் உயர்வு கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டில் வீட்டில் இருந்ததுதான் முழுமையான காரணம். வீட்டில் இருப்பதை மக்கள் விரும்பியதும் இல்லை.

வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமே அல்ல . ஆனாலும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையை மதித்தே மக்கள் வீட்டிலேயே இருந்தனர்.

இந்த வகையில் மக்கள் வெகு நியாயமாகவே நடந்துகொண்டனர் என்பதுதான் உண்மை. தேசிய மின்வாரியம் இதைச் சமன் செய்யும் அளவில் ஒட்டுமொத்தமாக 50 விழுக்காடு கழிவு கொடுப்பதற்கும் முன்வருவது  சரியான முடிவாக இருக்கும் என்பதையும் பரிசீலிக்கலாம்.

மின் கட்டணத்தில் மக்களின் அதிருப்தி அதிகமாகவே இருக்கிறது. இதனைச் சரிகட்ட 50 விழுக்காடுவரை கழிவு  நியாயமானதாக இருக்கும். துன்ப காலத்தில் உதவி என்பதாகவும் கருதலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here