என் தந்தையே நினைவெல்லாம் உன் சிந்தையே!

அன்புள்ள அப்பா – என்ற ஒரு சொல்போதும் தடைகள் அனைத்தையும் தகர்த்தெரியும் சக்தி நம்முள்ளே தோன்றும்.. நான் சோர்ந்து அழும்போதெல்லாம் சேர்ந்து நடப்போம் என தன் கையோடு சேர்த்து அழைத்துச் சென்று வெற்றியை சுவைக்கச் செய்து ஓரம் நின்று கூர்ந்து கவனித்த அற்புத மனிதா..!

தாயும் பத்து மாதம் தான் சுமந்தாள் நீதானே மத்தமாதமெல்லாம் சுமந்தாய். முதலில் சொன்னது வயிற்றில் இரண்டில் சொன்னது வாழ்வில். தாய் – பாலூட்டி வளர்த்தாள் – நீயோ தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் சேர்த்து என்னை தாலாட்டியல்லவா வளர்த்தாய். கஷ்டங்கள் பல உன் தோளில் இருந்தாலும் ஒருநாளும் என் இஷ்டங்களில் தடைபோட எண்ணியதில்லை.

 

பலநேரம் அவமானங்கள் சிலநேரம் தன்மானங்கள் என இரண்டையும் ஒரு சேர கலந்து தன் வாழ்வை தானே செதுக்கிய சிர்ப்பி நீ..! அளவில்லை உங்களை அன்புக்கடலில் ஆழ்த்த. தமிழில்லை என்னிடம் உங்களை தாலாட்டி வாழ்த்த. வாழ்க என் தந்தையே! என் நினைவெல்லாம் உன் சிந்தையே

– பழனியான்டி பெரியசாமி – என் வாழ்வில் நிகழ்ந்த மிக அற்புதமான விஷயம் நிங்கள். உங்களை தந்தையாகப் பெற நான் என்ன புண்ணியம் செய்தேனோ. உங்களைப் போல் ஒருவர் இனியும் இல்லை..

என் வாழ்வின் ஆதாரம் நீங்கள். நான் தலைநிமிர்ந்து நடக்கக் காரணம் நீங்கள். உங்களைப் போல் ஒரு தந்தை அமைய நான் வரம் வாங்கி வந்தேன் இன்று போல் என்றும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் நல்ல எண்ணங்களோடும் வாழ இந்தப் பிரபஞ்சத்தை வேண்டுகிறேன் என் ஆசை அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here