மாரத்தான் போட்டிக்காக பினாங்கு பாலம் டிசம்பர் 17 அன்று தற்காலிகமாக மூடப்படும்

ஜார்ஜ் டவுன்:

னைத்துலக மராத்தான் போட்டியை முன்னிட்டு பினாங்கு பாலம் வரும் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 17) அதிகாலை 12.01 மணி முதல் காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படும்.

மராத்தான் முடிந்ததும் அதே நாளில் காலை 10 மணி முதல் பாலம் மீண்டும் திறக்கப் பட்டு, வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கும் என்று PLUS மலேசியா தெரிவித்துள்ளது.

சாலைப் பயனர்கள் இரண்டாம் பினாங்கு பாலத்தை தற்காலிகமாக மாற்றாகப் பயன்படுத்துமாறும், வழங்கப்பட்ட அனைத்து சைன்போர்டுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறும் PLUS பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

“நெடுஞ்சாலைப் பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் X @PLUSTrafik ஆப், PLUS ஆப், Chatbot PUTRI அல்லது எலக்ட்ரானிக் மெசேஜ் சைன்போர்டுகள் (VMS) மூலம் சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம்,” என்று அது மேலும் கூறியது.

வாகன ஓட்டிகள் PLUSLine-ஐ 1800-88-0000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவசரச் சூழ்நிலையில் உதவி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here