விஜய்யின் பிறந்த நாளுக்காக மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பிறந்த நாளுக்காக மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள். டிரெய்லர் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்தாலும், இந்த போஸ்டரைச் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.