தகுதியிருந்தும் வங்கிக் கடன் கடுமை

வீடுகள், வாகனங்கள் தொழில்களுக்கான  அரசாங்க ஊக்கத் தொகைகளைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் பலரின் நம்பிக்கையை வங்கிகள் கடனாகவே வகைபடுத்தி வத்திருக்கின்றன.

மலேசிய இன்ஸ்டிடியூட் ஆப் எஸ்டேட் முகவர்கள் தலைவர் எரிக் லிம் பூன் பிங், ரியல் எஸ்டேட் தொழிற்துறைக்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்., இதில் வீட்டு உரிமையாளர் ஆகுதல், மறு விற்பனை அறிமுகப்படுத்துதல், முத்திரை வரிகள் உண்மையான சொத்து ஆதாய வரிகள் ஆகும்.

குத்தகையாளர்களுக்கும் வீடு வாங்குபவர்களை  ஈர்க்கவும் ஊக்கத்தொகைகளை வழங்கியுள்ளனர்.

இருப்பினும், வங்கிகள் கடன் வழங்கும் தேவைகளை கடுமையாக்கியுள்ளது. பல வங்கிகள் கடன் விண்ணப்பங்கள் அனைத்தையும் நிராகரித்திருக்கின்றன.

2012 ஆம் ஆண்டில் தேசிய வங்கி மலேசிய விதிக்களுக்கேற்ப கடுமையான கடன் கொள்கைகளுக்கு,  தொற்றுநோய்கள் தொடர்பில், வங்கிகளின் கடன் ஒப்புதலுக்கான கடுமையான நகர்வுகளில், வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுக் கடன்களைப் பெறுவது கடினமாக்கியுள்ளது என்று லிம் கூறினார்.

முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் தங்கள் திட்டங்களை நிறுத்தி வைத்துவிட்டு, இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது. மேலும் அவர்கள் நிதி ரீதியாக மிகவும் பாதுகாப்பாகவும் கடன்களுக்கு சிறந்த தகுதி உடையவர்களாகவும் இருந்தும் கடன்பெறமுடிவதில்லை.

இதற்கிடையில், மலேசியாவின் மோட்டார் கடன் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ டோனி கோர், வருங்காலத்தில் கார் வாங்குபவர்களும் கடன் விண்ணப்பங்களில் மிகவும் கடுமையான தேவைகளை எதிர்கொள்ள விருப்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக எண்ணெய், எரிவாயு, விருந்தோம்பல், சுற்றுலா போன்ற அதிக ஆபத்து உள்ள துறைகளில் உள்ளவர்களும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களும் அவர்களின் கார் கடன் விண்ணப்பங்களில் சுமார் 25 விழுக்காடு மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here