செலாயாங் வட்டாரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல் கைது

செலாயாங் வட்டாரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல் கைது செய்யப்பட்டது என்று கோம்பக் மாவட்ட காவல் துறை தலைவஎ எசிபி அரிஃபய் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை கோம்பக் வட்டாரத்தில் 115 வீடு புகுந்து திருடிய சம்பவங்கள் புகார் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் தேதி செலாயாங்கில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் 7.30 மணி அளவில் இரவு உணவு உண்பதற்கு வெளியே சென்று விட்டார்.

அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்பிய பிறகு வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பல பொருட்கள் காணமல் போனதை கண்டு செலாயாங் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

கிட்டத்தட்ட 30,000 வெள்ளி பெருமானமுள்ள பொருட்கள் கொள்ளையடிக்கட்டது என அவர் புகார் செய்து உள்ளார்.

இப்புகாரின் தொடர்பாக செலாயாங் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் செலாயாங் பாருவில் சந்தேகிக்கும் வகையில் இருந்த மைவி கார் ஒன்றை சோதனை செய்தனர்.

அக்காரில் இரண்டு சீன ஆடவர்கள் இருந்தனர். அந்த காரில் வீடு உடைக்கப்படும் கருவிகளை காவல் துறையினர் கண்டெடுத்தனர்.

அதன் பிறகு கைது செய்யப்பட்ட அந்த இரு சீன ஆடவர்களின் வீட்டை சோதனை செய்தபோது அவ்வீட்டில் இருந்து 3 மடிகணினிகள் பெண்கள் பயன்டுத்துன் கைபைகள் பல வகையான கை கடிகாரங்கள் 6 கைதொலபேசிகள் மற்றும் 4 மதுபோட்டில்கள் கண்டு எடுக்கப்பட்டது என்று எசிபி அரிஃபாய் தெரிவித்தார்.

இவர்களை கைது செய்ததன் வழி 21 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் விசாரனைக்காக 6 நாள் கோம்பக் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here