நடிகர் சிவகார்த்திகேயன், தனது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, மீண்டும் போற போக்குல் ஒரு போட்டோ ஷூட் என்று தலைப்பிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் பதிவைப் பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், “போற போக்குல பண்ணதுக்கே இப்படின்னா, பிளான் பண்ணி பண்ணிருந்தா வேற மாதிரி போலயே.. ஸ்டைலா இருக்கீங்களே என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
நெல்சன் திலீப் குமாரின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், “கமெண்ட போட்டோமா, ரெண்டு கலாய் கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காப்பி தண்ணிய குடிச்சமானு இருங்க இயக்குநரே. இன்ஸ்டாலயே சுத்திட்டு திரிய கூடாது” என்று நகைச்சுவையாக கமெண்ட் பதிவிட்டுள்ளார்.