வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிம்மா உதவி

கனத்த மழையால் கம்போங் ஜிம்மா லாமாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை நெகிரி செம்பிலான் மாநில கிம்மா மகளிர் பிரிவு வழங்கியது.

போர்ட்டிக்சன் ஜாலான் சிரம்பான் சாலையில் அமைந்துள்ள கம்போங் ஜிம்மா லாமாவில் இரண்டு நாட்களுக்கு முன் கடுமையான மழை பெய்தது. இந்த வெள்ளத்தில் சுமார் 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த மின்சாரப் பொருட்கள், மெத்தைகள், தளவாடப் பொருட்கள் சேதமடைந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

கிம்மா நெகிரி செம்பிலான் மாநில மகளிர் தலைவியும் போர்ட்டிக்சன் தொகுதி மகளிர் தலைவியுமான புவான் சித்தி ஹவா தலைமையில் மாநில கிம்மா கட்சியின் இடைக்காலத் தலைவர் மற்றும் போர்ட்டிக்சன் தொகுதித் தலைவருமான ஹாஜி சீடேக், தொகுதி துணைத் தலைவர் ரஃப்பி தொகுதித் பொறுப்பாளர்கள் ஆகியோர் விரைந்து 20௦ குடும்பங்களுக்கு வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள், மெத்தைகள் போன்ற பொருட்களை வழங்கினர்.

க.கலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here