கோலாலம்பூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சினி ஏரி சின்ன ஏரியல்ல. மலேசியாவின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியாகும். இது, ஒரு காலத்தில் மிதக்கும் தோட்டம் போல் இருந்தது, ஆயிரக்கணக்கான வெள்ளை, இளஞ்சிவப்பு தாமரை மலர்கள் அதன் மேற்பரப்பை நிரப்புக்கொண்டு அத்துணை அழகாய் காட்சி தந்துகொண்டிருந்தது. அந்த அழகு, அருகில் நிகழும் வெட்டு மரத்தூசுகளால் இப்போது சேதமடைந்து கிடக்கிறது.
சினி ஏரியில் மறைந்து கிடக்கும் பேரழகு இயற்கையின் நன்கொடை. அது பாழடிக்கப்பட்டிருக்கிறது. இவ்வழகு மீட்டெடுக்கப்பட்டால் சுற்றுலாத்துறைக்கு மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்றாகிவிடும். இதன் முக்கியத்துவம் இன்று உணரப்பட்டிருக்கிறது. பஹாங் அரசாங்கம் ஏரியின் மகிமையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
ஏரியை மீட்டெடுப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு பஹாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்தபோது, மாநில நிர்வாகம் மார்ச் 13, 2019 ஆம் நாள், 4,498 ஹெக்டர் ஏரியை நிரந்தர வனக் காப்பகமாக அங்கீகரித்தது.
சம்பந்தப்பட்ட பகுதி சிறியதல்ல, ஏனெனில் இது கிட்டத்தட்ட 6,000 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டது. 110 மீட்டர் x 70 மீட்டர் அளவைக் கொண்டுள்ளது, மேலும் எதிர்கால தலைமுறையினருக்காக சினி ஏரியில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் மாநில அரசு தீவிரம் காட்டியது.
அங்குள்ள சுரங்கப் பிரச்சினையைத் தீர்க்க, சுரங்க நடவடிக்கைகளுக்காக மாநில அரசு ஒரு சிறப்புக் கொள்கையையும் வகுத்தது, மற்றவற்றுடன், சினி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் புதிய சுரங்க குத்தகைக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று முடிவு செய்தது.
இப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான நிலம் , சுரங்க அலுவலகம், சுற்றுச்சூழல் துறை, வனவியல் துறை, பஹாங் மாநில செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்கள் மீதான புகார்களும் உடனடியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் வான் ரோஸ்டி உறுதியளித்தார்.
10 முதல் 20 ஆண்டுகளில் சினி ஏரியின் அழகை மக்கள் மீண்டும் ரசிக்க முடியும் என்று பஹாங் சுற்றுலா, சுற்றுச்சூழல், தோட்டக் குழுத் தலைவர் டத்தோஶ்ரீ முஹமட் ஷர்கர் சம்சுதீன் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு இதற்கான சிறப்புக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது, இப்போது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) வழங்கிய ஏரியின் அங்கீகார நிலையை பராமரிப்பதற்கும், அதை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளித்திருப்பதை ஏற்று செயல்படுத்தும் நிலைக்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தை பெரிய அளவில் முன்னெடுப்பதற்கு முன்னர் சில சுரங்கங்களின் அனுமதி காலாவதியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசராவுடன் அந்த ஏரியைக் காணச் சென்றபோது, இந்த முயற்சியை உணர்ந்து, மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரியதாக முஹமட் ஷர்கர் தெரிவித்தார்.