பள்ளிக்குப் போக பாலர்ப் பள்ளியினர் ஆர்வம்

இன்னும் சில தினங்களில் பாலர்ப்பள்ளிகள் திறக்கப்பட விருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்படும்போது பிள்ளைகளை அனுப்பும்படி பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நினைவுறுத்தப்பட்டிருக்கிறது,

பாலர்ப் பள்ளிகளுக்கு வருகின்ற குழந்தைகளுக்கு வீட்டு உணவு மறுக்கப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து கொடுத்தனுப்பப்படுகின்ற உணவை பிள்ளைகளிடம் வழங்காமல் ஆசிரியர் அல்லது பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பள்ளியில் வழங்கும் உணவை ஏற்குமாறு கூறப்பட்டிருப்பதால் உணவுக்குக் கூடுதல் கட்டணம் பெறவேண்டியிருக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதை பெற்றோர் விரும்புவதில்லை என்று மலேசிய மழலையர் பள்ளி சங்கத்ததலைவர் எவ்லின்  லிங் கூறினார்.

அரசாங்கம் இதைக்கருத்தில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். மழலையர் பள்ளி ஜூலை முதல் நாள் திறக்கப்படும்போது, அர்சாங்கத்தின் 6,216 பள்ளிகள்,  கெமாஸ் 1,781, பாலர்ப்பள்ளிகள் 8,530, தனியார் மழலையர் பள்ளிகள் 7,887 என மாணவர்கள் பள்ளிக்குச்செல்ல ஆர்வத்துடன் இருப்பர். புதியவர்களையும் கலர் கலரான நண்பர்களையும் சந்திப்பதில் ஆர்வமாய் இருப்பதை பெற்றோர் உணரத்தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் புதிய எஸ்.ஓ.பி. அவர்களைக் கண்காணிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here