ஜோகூரில் வெள்ள நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது

ஜோகூர்பாரு:  ஜோகூரில் வெள்ள நிலைமை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) மதியம் நிலவரப்படி  சற்று கட்டுக்குள் வந்துள்ளது. 40 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் மட்டுமே தற்காலிக தங்குமிடத்தில் இருக்கின்றனர். நேற்றிரவு, 47 குடும்பங்களைச் சேர்ந்த 166 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10 மணிக்கு பட்டு பகாட்டில் உள்ள   தற்காலிக  தங்கும் மையம் (பிபிஎஸ்) அதாவது  ஶ்ரீ அமான் இடைநிலைப்பள்ளி  மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைந்ததாக  மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் தெரிவித்தார்.

இதன் பொருள் என்னவென்றால்  வெள்ளத்தால்  தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாவட்டம் மூவார் மட்டுமே. மூவாரில், இன்னும் இரண்டு தற்காலிக நிவாரண முகாம்கள் இயங்கி வருகிறது. அதில் ஒன்றான  ஶ்ரீ மெந்தாரி இடைநிலைப்பள்ளியில் கம்போங் சாரங் புவாயாவைச் சேர்ந்த 26 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு தற்காலிக நிவாரண மையம் ஓராங் காயா இடைநிலைப்பள்ளியாகும். அம்மையத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். (பெர்னாமா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here