விட்டுக்கொடுப்பதால் விரயம் இல்லை

ஒன்றுமே இல்லாதிருப்பதை விட கிடைப்பதை ஏற்பதே மேல் என்று மனத்தைத் தேற்றிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு பஞ்சமேயில்லை. ஆனாலும், சிலர்பலர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. கிடைக்காதபோது அமைதி காத்தவர்கள் ஏதேனும் கிடைக்கின்றபோது அது போதவில்லை என்று சங்கீதம் பாடத்தொடங்கிவிடுவார்கள்.

இதில், சில நிறுவனங்களும் அப்படித்தான் இருக்கின்றன. கோவிட் காலத்தில் முடங்கிக்கிடந்த விமானப்பயணங்களுக்கான கட்டணங்கள் கழுத்துப்பிடியாக இருக்கிறது என்கிறார்கள். கோவிட் காலத்தில் பாதியாக இருந்த இருக்கைகளை இப்போது முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

பாதிப்பு காலத்தில் நட்டத்தில் இருந்ததைவிட இப்போது மாற்றத்திற்கு வந்திருக்கும் விமான நிறுவனங்கள், விட்டதைப்பிடிப்பதற்காக கட்டணைத்தை குறைக்க முன்வரவில்லை.

ஒருபக்கம் மலேசிய சுற்றுலாத்துறைக்கு வலுவூட்டும்படி குரல்கள் ஒலிக்கின்றன. மறுபக்கம் பயணக்கட்டணங்கள் குறையவில்லை என்ற கொதிப்பும் இருக்கின்றன.

கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை என்பதெல்லாம் சுற்றுலாத்துறைக்கு உதவாது. இரண்டையும் சமன்படுத்தும் நிர்வாகமுறையால் மட்டுமே சுற்றுலா உயரமுடியும். அதற்கு விமானக் கட்டணங்கள், அல்லது பயணக்கட்டணங்கள் குறைப்பு மிக முக்கிய பங்காற்றும்.

முதலில், விமானக்கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். விமான நிறுவனங்கள் அக்கறையோடு இறங்கிவரவேண்டும். ஆனாலும் விமானப்பயண நிறுவனங்கள் மூச்சு விடுவதுபோல் தெரியவில்லை. சுற்றுலாத்துறை மேம்படவும் வேண்டும். விமான நிறுவனங்களும் பிழைத்தெழவேண்டும். இதற்கு இருதரப்பும் இணங்க வேண்டும் என்பதற்கு மாவ்கோம் என்ற விமான போக்குவரத்துத்துறையும் போகுவரத்துத்துறையுடன் அமைச்சு பேச்சுகள் நடத்திவருவதாக அறியப்படுக்கிறது.

கட்டணம் குறைந்தால் சுற்றுலாவுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் தொழில் சார்ந்தவர்களும் பயனடைவர். விட்டுக்கொடுப்பதால் எந்த விரயமும் ஏற்படாது.

ஓய்ந்து கிடந்தபோது இருந்ததைவிட நிலைமை சீரடைந்திருக்கிறது. அதனால், மேலும் சீரடைவு காணும்வரை பயணக்கட்டணங்களைக்குறைப்பதே மேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here