அன்வாரை பிரதமர் வேட்பாளராக பக்காத்தான் உயர்மட்ட குழு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயா: பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் பிரதமருக்கான கூட்டணியின் வேட்பாளராக இருப்பார் என்று பக்காத்தான் ஹாரப்பன் உயர்மட்ட குழு தனது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் மற்றும் பக்காத்தான் அரசாங்கத்தின் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கும் கூட்டத்தில், பார்ட்டி வாரிசான் சபாவின் தலைவர் டத்தோஶ்ரீ  ஷாஃபி அப்டால் பிரதமர் வேட்பாளருக்கான முன்மொழிவு குறித்தும் சபை விவாதித்தது.

மக்களின் உரிமையை  மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டும் என்று உயர்மட்ட குழு நம்புகிறது. இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை. எனவே  உயர்மட்ட குழுவின் இந்த நோக்கத்திற்காக ஷாஃபி அப்டால் உட்பட அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து விவாதிக்க அன்வாருக்கு முழு உரிமையை வழங்கியுள்ளது  என்று அவர்கள் திங்களன்று (ஜூலை 6) ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த அறிக்கையில் அன்வார், பார்ட்டி அமானா நெகாரா தலைவர் முகமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டனர். முன்னதாக, துன் டாக்டர் மகாதீர் முகமது மூன்றாவது முறையாக பிரதமராக திரும்புவதற்கான முன்மொழிவை டிஏபி மற்றும் அமானா ஆதரித்தனர். அந்த திட்டத்தின் படி, அன்வார் துணை பிரதமராக நியமிக்கப்பட்டு டாக்டர் மகாதீருக்குப் பிறகு ஆறு மாதங்களில் பிரதமர் பதவியை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், பிகேஆர் தலைவரான அன்வார் பிரதமர் வேட்பாளராக தான் முன்மொழியப்பட வேண்டும் என்று  பிடிவாதமாக இருக்கிறார். பிரச்சினை ஒரு முடிவுக்கு வருவதற்கும்  சபா மற்றும் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஷாஃபியின் பெயரை பிரதமராக டாக்டர் மகாதீர் முன்மொழிந்தார்.

விரைவான தேர்தலுக்காக மத்திய அரசு கலைக்கப்பட்டால், பக்காத்தான் ஹாரப்பனின் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் தங்கள் கூட்டங்களை கலைக்க முற்படாது என்றும் சபை முடிவு செய்தது. மத்திய  மற்றும் மாநில அரசாங்கங்களின் கவனம் கோவிட் -19 தொற்றுநோயை சமாளிக்க மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் உயர்மட்டக் குழு  ஒத்துப்போகிறது என்று அவர்கள் கூறினர்.

பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், டான் ஸ்ரீ அரிஃப் யூசுப்பை  மக்களை சபாநாயகர், ஙா கோர் மிங் துணை சபாநாயகர் பதவியில் இருந்து  நீக்குவதற்கான பிரேரணையை அவர்கள் நிராகரிப்பார்கள் என்றும் சபை முடிவு செய்தது. பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா மற்றும் பி.கே.ஆரைச் சேர்ந்த பல சட்டமியற்றுபவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறிய பின்னர், 2018 மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பக்காத்தான் ஹாரப்பன் அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச் மாதம் உடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here