கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச சேவை.. டக்சி ஓட்டுநர் ரவிந்திரனின் மனிதநேயம்

சிரம்பான் வட்டரத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏந்தி நிற்கும் தாய்மார்களுக்கு இலவச டக்சி சேவையை கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கி வருகிறார் 33 வயது மதிக்கதக்க இந்திய இளைஞர் பி.ரவிந்திரன்.

தாம் சிறுவனாக இருந்தப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்த இல்லம் எனும் தமிழ் திரைப்படத்தின் தூண்டுதல் காரணமாக, தாம் இத்துறையை தேர்ந்தெடுத்து அதன்வழி இச்சேவையை தொடர்ந்து செய்து வருவதாக குறிப்பிட்டார்.

இனம் பாராமல் அனைத்து தர தாய்மார்களுக்கு இச்சேவை மனதார செய்து வரும், தமது இச்சேவையால் சுமார் 50க்கும் மேலான தாய்மார்கள் பயனந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி பட்ஷா எனும் தமிழ் திரைப்படத்தில் அத்திரைப்பட நாயகன் ரஜினிகாந்த ஒரு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துக்கொண்டு, தனது வடிக்கையாளர்களுக்கு புரிந்து வரும் சமுக நலன் சேவை தம்மை வெகுவாக கவர்ந்தது.

அச்சேவையை போன்று தாமும் தன்னால் இயன்ற சமுக நலன் சேவைகளை செய்வதில் மனம் திருப்தி கொள்வதாக ரவிந்திரன் குறிப்பிட்டார். அந்த ஓட்டோவின் பின் புறம் குறிப்பிடப்பட்ட “கரப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை ஏந்திய தாய்மார்களுக்கு இலவச சேவை” எனும் வார்த்தையை தனது டக்சி பின்புறமும் பொறுத்திவுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் செய்து வரும் இச்சேவையை பார்த்த எனது சக டக்சி ஓட்டுநர்கள், தம்மை பைத்தியக்காரன் என்றெல்லாம் சாடினார்கள், கிண்டல் கேலி செய்தார்கள். அதையெல்லாம் தாம் பொருப்படுத்தவில்லை, எண்ணி் கவலைப்படவில்லை.

தமக்கு பிடித்திருக்கிறது, இச்சேவை தாம் செய்யும் தொழிலுக்கு மன திருப்தியை அளிக்கிறது, அது எனக்கு போதும், அதுவே தனக்கு மகிழ்ச்சி என பூரிப்புடன் கூறுகிறார் ரவிந்திரன்.

கலை 7.00 தொடங்கி இரவு 7.00 மணி வரையில் தாம் டக்சி சேவையில் ஈடுப்பட்டு வருவதாகவும், வாரம் மூன்று முறை சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்கு சென்று, அங்கு டக்சிக்காக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை ஏந்தி தாய்மார்களை பார்த்தால், அவர்களை ஏற்றி கொண்டு அவர்களின் வீட்டில் இறக்கிவிடுவேன். அவர்கள் டக்சி சேவைக்கான கட்டணத்தை தருவார்கள், நான் வாங்க மறுத்துவிடுவேன்.

தமது இந்த சேவை தனது மனைவி உட்பட குடும்பத்தார்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். தமது இந்த சேவையை பாராட்டி சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, அண்மையில் தமக்கு வெ.500யை அன்பளிப்பாக வழங்கினார். தனது மனைவி பெயர் திருமதி வனிதா என கூறும் ரவிந்திரன், சில மாதங்களுக்கு முன்புதான் அவர் அழகான குழந்தையை ஈன்றெடுத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் அவர் ஆனந்தமாய் கூறினார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here