போதைப்பொருள் விருந்து: மாணவர்கள் உட்பட 21 பேரை கைது

கோலாலம்பூர்: புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள்  விருந்தில் பங்கேற்றதற்காக நான்கு உயர்நிலை  மாணவர்கள் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாலை 4.30 மணியளவில் போலீசார் நடத்திய சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதன்கிழமை (ஜூலை 8) டாங் வாங்கி ஒ.சி.பி.டி உதவி ஆணையர் பாஹ்மி விஸ்வநாதன் அப்துல்லா கூறுகையில், காவல்துறையினர் அவவளாகத்தில் சோதனை நடத்தியபோது 28 ஆண்களும் ஆறு பெண்களும் விருந்து உபசரப்பில் கலந்து கொண்டனர். இருப்பினும், அவர்களில் 21 பேர் மட்டுமே மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட போதை மருந்துகள் உட்கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது. 15 முதல் 40 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இந்த வழக்கு ஆபத்தான மருந்து சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) (அ) இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நாங்கள் இது குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார். ஏதேனும் குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் உள்ளவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஏ.சி.பி பாஹ்மி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here