விமர்சனங்களுக்கு வெளிப்படையான பதில் இல்லை

விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும், வல்லுநர்கள், பங்குதாரர்களுடன் ஈடுபடவும் அரசாங்கம் மறுப்பது நாட்டின் வறுமை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மிகப்பெரிய தடையாகத் தெரிகிறதாம்.

தீவிர வறுமை குறித்த முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் ஆல்ஸ்டன் உணவு, தங்குமிடம் , அடிப்படை சுகாதாரத்தைப் பெறுவது பலருக்கு கடினமாக இருப்பதாகக் கூறினார். உண்மையான நிலைமைக்கு இது முரணானது என்கிறது அவரின் கருத்து.

சபா, சரவாகில் உள்ள பழங்குடி சமூகங்கள், நகர்ப்புற நகரங்களில் உள்ள பல வீடுகள், உணவு வங்கிகளின் தரவுகளின் மூலம் கூட பல மலேசியர்கள் அதைப் பெற சிரமப்படுவதாகக் கூறினார்.

இங்குள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்னவென்றால், அதிகாரத்துவம் தொடர்ந்து தற்காப்புடன் உள்ளது என்பதாகும். உண்மையில் ஆக்கபூர்வமான விமர்சனங்களில் ஈடுபட விரும்புவதில்லை.

கல்வி, சிவில், சமூகத் துறையுடன், அதிகாரத்துவ சிறப்பம்சத்தின் வலுவான பாரம்பரியத்தை நாடு கொண்டிருப்பதைக் கருத்தில் கொள்வது ஒரு பரிதாபம் என்கிறது அவரின் அறிக்கை.  தற்போது பயன்படுத்தப்படுவதை விட அதிகத் திறன் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார் அவர்.

ஒரு கட்டத்தில் வறுமை நிலைமையை ஒப்புக்கொள்வது (அரசாங்கத்திற்கு) இன்றியமையாதது என்று நான் கருதுகிறேன்  என்கிறார். மலேசியாவில் இன்று வறுமை, மனித உரிமைகள் குறித்த தனது இறுதி அறிக்கையைப் பற்றி அவர் விவாதித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் மிகக் குறைந்த வறுமை விகிதத்தை 0.4 விழுக்காடு  கொண்டதாகக்கூறும் மலேசியாவின் கூற்று தவறானது. இதில் பெருமளவு கணக்கிடப்படவில்லை என்று ஆல்ஸ்டன் கூறியிருந்தார்.

வாழ்க்கைச் செலவைப் பிரதிபலிக்காத, தேவையற்ற குறைந்த வறுமைக் கோட்டை நாடு பயன்படுத்துகிறது என்றும், மேலும் யதார்த்தமான வறுமை விகிதம் 16 முதல் 20 விழுக்காடு வரை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் ஒரு தனி அறிக்கையில், வறுமைக் கோட்டை திருத்துவதற்கான முந்தைய பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கத்தின் உறுதிப்பாடும் புதிய நிர்வாகத்தின் கீழ் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கவனித்துக்கொள்வதற்கு, பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற விரும்பினால், அதன் தரவு புள்ளிவிவரங்களில் அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சுயாதீன ஆய்வுக்கு புள்ளிவிவரங்களை கொடுக்க நாடு தயங்குவதாகத் தெரிகிறது, இது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்றார் அவர்.

மலேசிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்  அதிக வெளிப்படைத்தன்மையையும் திறனையும் கொண்டிருக்க வேண்டும், எடுத்துக்காட்டாக, என்ன நடக்கிறது என்பதை பகுப்பாய்வு செய்ய முடியும், மேலும் மேம்படுத்தக்கூடியவற்றை அடையாளம் காணவும் முடியும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சுங்கைபூலோ சுபாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி. சிவராசா ராசையா, முந்தைய நிர்வாகத்தின் கீழ் அப்போதைய துணை கிராம அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது, ​​கிராமப்புறங்களில் பொது பயன்பாடுகள் குறித்தவற்றில், அரசாங்கத்திற்கு முறையான தரவு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது, நிதிப் பயனீட்டை நியாயமாகப் பயன்படுத்துவதில் கடினம் என்று அவர் கூறினார், ஏனெனில் முறையான விநியோகத்தை உறுதி செய்வதற்கு தேவையான தகவல்கள் அவரது அமைச்சுக்கு இல்லை.

சபா, சரவாக்கில் எத்தனை கிராமங்களில் சுத்தமான நீர், 24 மணி நேர மின்சாரம் , தரமான சாலைகள் இல்லை என்று நான் அதிகாரத்துவத்திடம் கேட்டேன். அவர்களால் எனக்கு ஒரு பதில் கூட சொல்ல முடியவில்லை என்கிறார் அவர்.

அவர்களின் தரவு சுமார் 15 விழுக்காடு மட்டுமே இருந்தது.  இது அதிர்ச்சியளிக்கிறது, என்றார் சிவராசா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here