எல்லையில் இந்தியா, சீனா படைகள் வாபஸ்

லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெல்லியில் இன்று முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகிறார்.

மோடி சென்ற லடாக்கின் நிமு, சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம் நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம். கால்வன் பள்ளத்தாக்குப் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதனைத் தொடந்து எல்லையில் போர் பதற்றம் உருவானது. பின்னர் இருநாடுகளிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகளைth தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் குவித்திருந்த படைகளை விலக்க ஒப்புக் கொண்டன.

தற்போது லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவமும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இருநாடுகளிடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தொடரவும் உள்ளன. இன்றைய பேச்சுவார்த்தைக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here