புக்கிட் அமான் வணிகக்குற்றப்புலனாய்வுத்துறைக்குப் புதியவர் நியமனம்

ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வரும் புதிய புக்கிட் அமான் வணிக, குற்ற புலனாய்வுத் துறை (சிசிஐடி) இயக்குநராக கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ ஜைனுதீன் யாக்கோப்  நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயல் மலேசியா காவல்துறை (பி.டி.ஆர்.எம்) கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் டத்தோ அஸ்மாவதி அகமட் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 28 ஆம் நாள் டத்தோஶ்ரீ முகமட் ஜக்காரியா அகமட் ஓய்வு பெற்றார். அவருக்குப்பதிலாக பதிலாக ஜைனுதீன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புக்கிட் அமான் சிசிஐடி நடவடிக்கை இயக்குநர் பதவியை தற்போது சிசிஐடி துணை இயக்குநர் டத்தோ சைபுல் அஸ்லி கமாருதீன் வகிக்கிறார்.

இதற்கிடையில், பினாங்கு போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை (சட்ட  ஆய்வாளர்) பணியாளர் அதிகாரி டிஎஸ்பி தியம் மிங் குங், தெரெங்கானு போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, ஜொகூர் லாஜிஸ்டிக்ஸ் ,  தொழில்நுட்ப துறை போக்குவரத்து ஊழியர்கள் அதிகாரி டி.எஸ்.பி லை பூன் சோய் ஜொகூர் லாஜிஸ்டிக்ஸ் ,  தொழில்நுட்ப துறையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here