பூஜை பாத்திரங்கள் புதுசு போல் தென்பட

இந்த முறையில் நீங்கள் பூஜை சாமான்களை தேய்த்தால் எந்த சிரமமும் இல்லாமல், எதையும் போட்டுக் கொதிக்க வைக்காமல் ஒரு மாதம் வரை புதுசு போலவே உங்கள் பூஜை அறையில் பூஜை சாமான்கள் மின்னிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

  1. பூஜை பாத்திரங்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ அவை எல்லாம் மூழ்கும்படி ஒரு டப்பில் தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள்.
  2. அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடா போட்டுக் கொள்ளுங்கள்.
  3. அதன் பிறகு அதில் சின்தடிக் வினிகர்(synthetic vinegar) ஒரு மூடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக 6, 7 பூஜை பாத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தும். அதற்கு மேல் நிறைய வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்ளுங்கள்.

இரண்டும் தண்ணீரில் கலந்ததும் உங்கள் பூஜை சாமான்களை எண்ணெய் மட்டும் துடைத்து விட்டு அப்படியே போட்டு விடுங்கள். நீங்கள் மஞ்சள் குங்குமத்தை கூட நீக்கத் தேவையில்லை. ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள். அதன் பிறகு ஒவ்வொன்றாக எடுத்து சபீனா அல்லது பீதாம்பரி பவுடர் கொண்டு சாதாரணமாக நீங்கள் தேய்த்தாலே போதும், புத்தம் புதிய பித்தளை பாத்திரம் போல் ஜொலிக்கும். இதற்காக நீங்கள் போட்டு அழுத்தம் கொடுக்க தேவையில்லை. லேசாக தேய்த்தாலே போதும்.

நீங்கள் கடையில் புதிதாக வாங்கியது போல் பளிச்சென்று இருக்கும். தண்ணீர் கொண்டு கழுவியதும் உடனே சுத்தமான துணி கொண்டு துடைத்து வைத்து விடுங்கள். தண்ணீரோடு அப்படியே வைத்து விடாதீர்கள். இதுபோல் நீங்கள் செய்தால் ஒரு மாதம் வரை பூஜை பாத்திரங்களை நீங்கள் விலக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே புத்தம் புதுசா இருக்கும்.

பூஜை பாத்திரங்கள் கருப்பு பிடிக்காமல் இருக்க நீங்கள் விளக்கேற்றும் முனையில் மஞ்சள் குங்குமம் வைப்பதற்கு முன் விபூதி வைத்துக் கொள்ளுங்கள் அதன் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து திரி போடுங்கள். இப்படி தீபம் ஏற்றுவதால் கருப்பு பிடிக்காது. சூடம் ஏற்றும் பொழுதும் இதேபோல் சிறிதளவு விபூதியை வைத்து ஏற்றுங்கள்.

விளக்கு எப்பொழுதும் தானாக அணைந்து விடக்கூடாது. விளக்கு அணைவதற்கு முன் நாமே பூ கொண்டு குளிர வைத்து விட வேண்டும். இப்படி செய்தால் சாத்திரச் ரீதியாகவும் நமக்கு நன்மை அளிக்கும். பூஜை சாமான்களை விலக்கவும் நமக்கு சுலபமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here