தீயணைப்பு மீட்புத்துறையின் மைசெஜாத்ரா வீடுகள்

மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை (ஜேபிபிஎம்) அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தனது மைசெஜாத்ரா திட்டத்தின் கீழ் 20 யூனிட் வீடுகளை நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும்  எண்ணிக்கை, அதன் நிதி. துறைகளின் பணியாளர்களின் திறனைப் பொறுத்தது என்று ஜேபிபிஎம் இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் கூறினார்.

தேர்ந்தெடுத்த (ஜேபிபிஎம்) பணியாளர்கள் வல்லுநர்கள், வீடுகளைக் கட்டுவதில் கவனம் செலுத்துவர் என்று கம்பாங் குப் தயக்கில் மைசெஜாத்ரா வீடுகளை ஒப்படைக்கும் போது செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சரவாக் ஜேபிபிஎம் ஆறு யூனிட் மைசெஜாத்ரா வீடுகளை வெற்றிகரமாக கட்டியது, ஒவ்வொன்றும் 55.74 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தன.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள், இயற்கை பேரழிவு அல்லது தீ விபத்துக்குள்ளானவர்கள், பி 40 குழுவை உள்ளடக்கிய துறையின் இலக்கு வீடுகளை வழங்குவதே  நோக்கமாகும்.

புதிய வீடுகளை நிர்மாணிப்பதைத் தவிர, வீட்டுவசதி, உள்ளூராட்சி அமைச்சகத்துடன் இணைந்து, இப்பிரிவுகளின் கீழ் உள்ளவர்களின்  வீடுகள்  பழுதுபார்க்கும் பணியும் மேற்கொள்லப்படுகிறது.

இதுவரை, 200 வீடுகள் பழுதுபார்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 150 வீடுகள் இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here