பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’- பிரசன்னா நெகிழ்ச்சி

நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள்.
அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அவரது இந்த 28 வருட திரையுலக பயணத்தை கவுரவிக்கும் விதமாக, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நடிகர்கள் பிரசன்னா, பிரேம்ஜி, மகத், நடிகைகள் பூனம் பாஜ்வா, நிக்கி கல்ராணி, பார்வதி நாயர், நந்திதா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஜித்துக்காக பொது முகப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் பிரசன்னா அஜித் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நடிகனாக வேண்டும் என்ற எனது கனவுக்கு வலுசேர்த்து, என்னை நானே செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுத்து, தோல்விகளை கடந்து கஷ்ட காலத்தில் என்னை தாங்கி பிடித்து பின்வாங்காத போராளியாக மாற்றியது தல அஜித்குமார்” என்று பாராட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here