ஐகூ 5 வெளியீட்டு தேதி அறிவிப்பு

புதிய ஐகூ 5 மாடல் பல்வேறு வெர்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவை அனைத்தும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் டீசர்களின் படி இதில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும், இதில் 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 ஐகூ 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்
முன்னதாக ஐகூ நிறுவனம் தனது 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. ஏற்கனவே இதேபோன்ற தொழில்நுட்பத்தை விவோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ஐகூ இசட்1 5ஜி மாடலில் உள்ள 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றே இந்த தொழில்நுட்பமும் டூயல் சார்ஜிங் சிப்செட்களை பயன்படுத்துகிறது. இதன் 120வாட் இரண்டு 60 வாட்களாக இரட்டை சிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை சார்ஜிங்கின் போது அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது.
இந்த சார்ஜர் இன்டெலிஜண்ட் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் கொண்டுள்ளது. இது அதிக வெப்பம் ஆவதை தவிர்க்க செய்கிறது. 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் 6சி செல் அரே-டைப் வடிவமைப்பு கொண்டுள்ளது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here