96 வயதில் பட்டதாரி

96 வயதான ஒரு போர் வீரர் ஒருவர் தனது பட்டதாரிக் கனவை நிறைவேற்றியுள்ளார்.

இத்தாலியின் மிகப்பழைய மாணவர் என்று நம்பப்படும் கியூசெப் பட்டர்னோவுக்கு எப்போதுமே கல்வியின் மீது ஆர்வம் இருந்தது.

வறுமை காரணமாக இவர் போர் வீரராக மாறினார்.  இறுதியாக அவர் பலேர்மோ பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்று பட்டதாரியானார்.

வாழ்க்கையில் இவ்வளவு தாமதமாகவா பட்டம் பெறுவது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ‘நான் ஒரு சாதாரண மனிதன்.

வயதைப் பொறுத்தவரை நான் மற்ற அனைவரையும் மிஞ்சிவிட்டேன். கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here