கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் இருவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), செல்வராசு (நாகை), ராமலிங்கம் (மயிலாடுதுறை) ஆகிய எம்.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here