கமல்ஹாசன் நற்பணி மன்றத்திற்கு பிரான்ஸில் விருது!

பிரான்ஸில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் நற்பணி மன்றத்திற்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது இந்திய தூதரகம்.

74வது சுதந்திர தின விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் இந்தியர்கள் கொண்டாடி தங்களது நாட்டு பற்றை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள இந்திய தூதரத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் சாதனை, சேவை புரிந்தோருக்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.

கொரோனா துயரில் உலக நாடுகளே திணறி கொண்டிருக்கும் வேளையில், பிரான்ஸில் உணவின்றி தவித்த பலருக்கு உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி கவனத்தை ஈர்த்த கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் சேவையை பாராட்டி பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரப் அவ்வமைப்பின் தலைவர் பிரான்சுவா கஸ்தோனுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here