ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவரை விட துணை அதிபராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மோசமானவர்.

ஜோ பிடன் அதிபரானால் உடனடியாக போலீஸ் துறையை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு சட்டத்தைக் கொண்டு வந்துவிடுவார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரைவிட எனக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு அதிகம் இருக்கிறது. ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இருவருமே போலீஸ் துறைக்கு எதிராக செயல்பட கூடியவர்கள். உங்களுடைய மரியாதையை, கவுரவத்தை இருவரும் பறிக்கின்றனர் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here