கோலாலம்பூர்:
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஈரான் தனது அமைதித் திட்டத்தைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை தொடரும் என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், இன்று பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் தரப்பு இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒருபுறம் அமைதி முயற்சிகள் தொடர்ந்தாலும், மற்றுமொரு முனையில் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.



















