இரண்டு குழந்தைகளை விஷஊசி ஏற்றி கொன்ற டாக்டர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் உள்ள ஓம் நகரில் வசித்து வந்தவர் சுஷ்மா ரானே. இவர் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் தீரஜ் (வயது 42), பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 11 வயதிலும், ஐந்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர்களுடன் 60 வயதான டாக்டரின் மாமியார் வசித்து வந்தார். இவர் காலையில் எழுந்து படுக்கை அறையை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. பின்னர் உள்ளே சென்று பார்க்கும்போது பெட்டில் தீரஜ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த நிலையில், பெண் டாக்டர் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சுஷ்மா ரானே தனது தற்கொலை கடிதத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமாக இல்லாத காரணத்தினால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் அறையில் இரண்டு மருந்தேற்றும் ஊசி (syringes) கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று பேருக்கும் மயக்க மருந்து கலந்த உணவை முதலில் கொடுத்துவிட்டு, அதன்பின் விஷ ஊசியை செலுத்தி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உடல்பரிசோதனை முடிவில்தான் மூன்று பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here