மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை மீறிய 135 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 123 பேருக்கு தலா 1,000 வெள்ளி கம்பாவுன்ட் விதிக்கப்பட்ட வேளையில் 12 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் தகவல்களை பெறாத குற்றத்திற்காக 30 பேரும் முகக் கவசம் அணியாத குற்றத்திற்காக 5 பேரும் கூடல் இடைவெளியை கடைப்பிடிக்காத 55 பேரும் இரவு கேளிக்கை மையங்களில் 37 பேரும் தனிமைப்படுத்துதலை மீறிய குற்றத்திற்காக ஒருவரும் அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்த குற்றத்திற்காக 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சொந்த வீடுகளில் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வரும் நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வீட்டில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மீறிய ஒருவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்வர். அதோடு போலீஸ் மற்றும் சுகாதார அமைச்சு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் கூறினார்.