கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கும் பெயரிடப்படாத படம், பாலிவுட்டில் அத்ரங்கி ரே ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இப்படங்களை தொடர்ந்து கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுடன் தனுஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வரும் தனுஷ், காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதன் காரணமாகவே பிரதீப் ரங்கநாதனை தொடர்பு கொண்டு கதை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கோமாளி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.





















