ராகுல்காந்தி தவறு செய்துவிட்டார் -நடிகை ரம்யா

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுப்பதாகவும், மூத்த தலைவர்கள் சிலருக்கு பா.ஜனதாவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதமும் இணையதளத்தில் வெளியாகின. இதுகுறித்து நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதுபோல காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்த ஆலோசனை குறித்தும் நிமிடத்திற்கு ஒரு முறை தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக கருதுகிறேன். இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி தவறு செய்து விட்டார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here