துபாய் போலீஸ் துறையில் முதல் பெண் வெடிகுண்டு நிபுணர் நியமனம்

துபாய் போலீஸ் துறையில் முதல் பெண் வெடிகுண்டு நிபுணர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இது குறித்து போலீஸ் துறையின் பாதுகாப்பு மற்றும் அவசரகால பொது நிர்வாக பிரிவின் இயக்குனர் அப்துல்லா அலி அல் கைத்தி கூறியதாவது:-

துபாயில் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றிய ரீம் அப்துல் ரஹ்மான் அப்துல்லா அலி முதல் பெண் வெடிகுண்டு நிபுணராக பொறுப்பேற்று உள்ளார்.

வெடிகுண்டு பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக தற்போது அவருக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் இங்கிலாந்து நாட்டின் கிரான்பீல்டு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டுகளை கையாளும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு போலீஸ் துறை சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெடிகுண்டு நிபுணராக பொறுப்பேற்ற ரீம் அப்துல் ரஹ்மான் கூறியதாவது:-

நான் இந்த துறையில் பல்வேறு பயிற்சிகளையும், செயல்முறை பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளேன். வெடிக்கும் பொருட்கள் குறித்த பட்ட படிப்பில் 90 சதவீத மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன்.

எனது பணியானது உரிமம் பெறாத வெடிக்கும் பொருட்களை செயலிழக்க வைப்பது, மண்ணிற்கு சேதம் விளைவிக்காமல் பாதுகாப்பாக வெடிபொருட்களை அகற்றுவது, சட்டவிரோதமான வெடிகுண்டுகள் மற்றும் அபாயகரமான பட்டாசுகளை அழிப்பது போன்றவைகளை மேற்கொள்வதாக இருக்கும். துபாய் போலீஸ் துறையில் முதல் பெண் வெடிகுண்டு நிபுணராக பொறுபேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here