தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்படும்

தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த வருடம் இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினமான இன்று விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்நிலையில் தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். தற்போதைய பரிசுத்தொகை 2008-ல் உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் ஒவ்வொரு 10 வருடங்களுக்காவது இது உயர்த்தப்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இந்திய வீரர்களின் திறமைகள் முன்பை விடவும் அதிகமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பரிசுத்தொகை விவரம்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ரூ. 25 லட்சம் (முன்பு ரூ. 7.5 லட்சம்)
அர்ஜூனா விருது: ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனை): ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
துரோணாச்சார்யா விருது: ரூ. 10 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here