2023 துருக்கி ஏர்லைன்ஸ் கேஎல் டவர் அனைத்துலக கோபுரம் ஏறும் போட்டி

தியாகு, ரீத்தனா

கோலாலம்பூர்:

மெனாரா கோலாலம்பூர் (கேஎல் டவர்) 27ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்க மாக 2023 துருக்கி ஏர்லைன்ஸ் கேஎல் டவர் அனைத்துலக கோபுரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது.

1996ஆம் ஆண்டு மெனாரா கோலாலம்பூர் நிர்மாணிக்கப்பட்டதில் இருந்து இந்தப் போட்டி நடத்தப்பட்டு வரு கிறது. அதே சமயத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவிருப்பதாக கேஎல் டவர் தலைமை நிர்வாக அதிகாரி நஸ்லி சஹாட் தெரிவித்தார்.

கேஎல் டவர் பெருவிழா என்று பெயர்பெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் பல்வகையான உணவுகளைத் தயாரித்து வழங்கும் வாகனங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றன. கேஎல் டவர் அனைத்துலக கோபுரம் ஏறும் போட்டி மெனாரா கோலாலம்பூர் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் 21ஆம் ஆண்டாக நடத்தப்பட்டது.

வானிலை நமக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைத்தது. இது இப்போட்டியைத் தொடர்ந்து நடத்துவதற்கு தங்களுக்கு மிகப்பெரிய விளங்குகிறது.

The launch of the KL Tower International Towerthon Challenge 2023 at Megaview Banquet Hall in KL Tower with VIPs and sponsors.

மேலும் இதுபோன்ற போட்டிகளில் உந்துசக்தியாகவும் பங்கேற்பதற்கு போட்டியாளர்களின் ஆர்வத்தையும் பிரதி பலிப்பதாக உள்ளது என்று நஸ்லி குறிப்பிட்டார். மலேசியர்களையும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளையும் இதுபோன்ற போட்டிகளில் கூட்டாகப் பங்கேற்க வைப்பதற்கு மெனாரா கோலாலம்பூர் நிர்வாகம் இன்னும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தும் என்றும் அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் அதிர்ஷ்டக் குலுக்கும் நடத்தப்பட்டது. பிரதான வெற்றியாளருக்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள துருக்கி சென்று வருவதற்கான இரண்டு விமான டிக்கெட்டுகளை துருக்கி ஏர்லைன்ஸ் வழங்கி இருக்கிறது. இந்தப் போட்டியில் சிறந்த நேரத்தைப் பதிவு செய்த 100 போட்டியாளர்களுக்கு டி சட்டை வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here