முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு டிக்கெட் இல்லை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை என்றால் பயண டிக்கெட் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மாநகர பேருந்துகள் இன்று இயக்கப்படும் நிலையில் கண்டக்டர்கள் டிரைவர்கள், கையுறையுடன் முகக்கவசம் அணிய வேண்டும், என்றும் அவ்வப்போது சானிடர் போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அனைவரும் முகக்கவசத்துடன் தான் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்வோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்:-

01.ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்
02.ஒரு இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமர வேண்டும்
03.பேருந்துகளில் நின்று கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் பயணம் செய்ய அனுமதிக்கூடாது
04.பயணிகள், பேருந்தின் முன்பக்கத்தில் இருக்கும் சானிடைசர் கொண்டு கைக்கழுவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி அளித்தால் மட்டுமே இயக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here