தொழிலாளர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் அவகாசம் தேவை

உற்பத்தித்துறையின் பணியாளர்களுக்கான தங்குமிடம், வசதிகளை ஏற்படுத்தித்தரும் சட்டம் செப்டம்பர் முதல் நாள் முதல் அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

இது குறித்துக் கருத்துரைத்த எஃப் எம் எம் எனும் உற்பத்தித்துறை சம்மேளனத்தலைவர் டான்ஶ்ரீ சோ தியான் லாய் மாறுபட்ட கருத்தையும் அதிருப்தியையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாட்டின் இன்றைய உற்பத்தித்துறையின் நிலை மிகவும் பலவீனமாக இருக்கிறது. உற்பத்தித்துறை வீழ்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. அனைத்தும் சரியாக இருந்தால் தொழிலாளர்களுக்கான தங்குமிடம், சுகாதாரம். மேலும் சிலவற்றை ஏற்படுத்தித்தர ஓராண்டுகாலம் பிடிக்கும்.

இதற்குமுன் தோட்டம், சுரங்கத்தொழில் போன்றவற்றிற்கே அனுசரிக்கப்பட்ட இச்சட்டம், நாட்டின் உற்பத்தித்துறைக்கும் அனுசரிக்கப்படுவதில் இன்னும் சிக்கல்கள் களையப்படவேண்டுயிருக்கிறது.

அனைத்துலக மாற்றத்திற்கு எற்ப தொழில்துறை மேம்படுவதில் உற்பத்தித்துறைக்கு அக்கறை அதிகமிருக்கிறது. ஆனாலும், அதற்கான முன் நகர்வுகளில் பலவீனம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் முதல் நாளிலிருந்து அமலுக்கு வந்திருக்கும் இத்திட்டம் ஜீரணிக்கமுடியாததாக இருக்கிறது. குறிப்பாக நிறைவு செய்யாத குற்றம் ஒவ்வொன்றுக்கும் வெ.50 ஆயிரம் அபராதம் என்பது கடுமையானதாக இருக்கிறது.

உற்பத்தித்துறை மெல்ல எழுந்து நடக்க முயற்சிக்கும்போது வெ. 50 அபராதம் என்பது மூச்சு முட்டுவதாக இருக்கும் என்பதால், கூடுதல் அவகாசம் வழங்குவதைப் பரிசீலிக்கலாம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here