6,000 பசுக்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்

நியூசிலாந்து நாட்டில் இருந்து சீனாவுக்கு பசுக்களை ஏற்றிச் சென்ற கப்பல் புயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தென்மேற்கு ஜப்பானின் அமாமி ஓசிமான தீவுக்கு அருகில் 6 ஆயிரம் பசுக்களுடன் சென்ற கப்பல், அங்கு வீசிய கடும் காற்று மற்றும் மோசமான பருவநிலை காரணமாக செயல்பாட்டை இழந்து மூழ்கத் தொடங்கியது.அதில் பயணம் செய்த 40 கப்பல் ஊழியர்களைக் காணவில்லை என ஜப்பான் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த கடற்பகுதியில் தத்தளித்துக்கொண்டிந்த கப்பல் ஊழியர் ஒருவர் மட்டும் மீடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது . மூன்று சிறு கப்பல்களும் , நான்கு விமானங்களும் ஊழியர்கள் மற்றும் பசுக்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கப்பல் ஊழியர்களில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் , இருவர் ஆஸ்திரேலியர்கள் எனவும் தெரியவந்துள்ளது . இந்த ஆண்டில் மட்டும் 46 ஆயிரம் பசுக்கள் நியூசிலாந்து நாட்டில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here