தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மூத்தமகன்

செங்கல்பட்டில் தாய் ஆலயம்மா சொத்தை பிரித்து கொடுக்க முடியாது என கூறியதால், தன் தாயின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு மகன் பூபதி தப்பியோடிவிட்டார்.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ஆலயம்மாள். 70 வயதான இந்த மூதாட்டிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளார்.

இதில் மூத்த மகனான பூபதி என்பவர் வெகுநாட்களாக தாயிடம் தனது சொத்தின் பங்கை எடுத்து தரச்சொல்லி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரச்சொல்லி பூபதி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாய் ஆலயம்மா சொத்தை பிரித்து கொடுக்க முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தான் வைத்திருந்த கத்தியால் தாயின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு பூபதி தப்பியோடிவிட்டார்.

அவர்கள் வீட்டிலேயே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பூபதி தனது தாயை கத்தியால் குத்திய காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here