நடிகர் விஷ்ணு விஷாலின் நிச்சயதார்த்தம்

விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினி நடராஜிடமிருந்து 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஆர்யன் என்ற 3 வயது மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, விஷ்ணு விஷால் பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவுடன் பழகி வருகிறார். அவர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தங்களுடைய படங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, இருவரும் இப்போது தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆம்! விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா ஆகியோருக்கு இன்று (செப்டம்பர் 7) நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இருவரும் தங்கள் வீட்டில் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். விஷ்ணு விஷால் தனது சமூக வலைதல பக்கத்தில் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டு அவரைப் பின்பற்றுபவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதங்களும் ஆதரவுகளும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வை ஒரு புதிய தொடக்கமாக அவர் மேற்கோள் காட்டினார்.

ஜுவாலா குட்டா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நாளை மறக்க முடியாததாகவும் சிறப்பானதாகவும் மாற்றுவதற்காக, இந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.

விஷ்ணு விஷால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜுவாலா குட்டா. புதிய வாழ்க்கையின் ஆரம்பம். நேர்மறையாக இருந்து, ஆரியன், நம்ம குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி உழைப்போம் . உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதம் வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here