வேண்டாம் என்று சொன்னவரை ஒதுக்காமல் நடிகை செய்த காரியம்

சமீபத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் தனது டுவிட்டரில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை நான் நிராகரித்துவிட்டேன். இது குறித்து எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளரிடமும் விளக்கிவிட்டேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள் என்றும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிராகரிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்களுக்கு வளைந்து கொடுக்க PC ஸ்ரீராம் இப்படி செய்தாரா என கேள்விகள் எழுந்தது. பிசி ஸ்ரீராம் அவர்களின் இந்த டுவீட்டுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதில் கொடுத்துள்ளார்.

அதில் ‘உங்களை போன்ற மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பினை இழந்து விட்டது உண்மையில் எனக்கு மிகப்பெரிய இழப்புதான். என்னை பற்றி உங்களுக்கு தர்மசங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சரியான வழியில் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் இந்த டுவீட் வேறு எதையாவது உள்ளடக்கி பேசினாரா என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here