பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இடையிலும் கமல்ஹாசன் போட்ட ரகசிய திட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்கான வேலைகள் தொடங்கிவிட்டன. மூன்று சீசன்களை கடந்து 4 ம் சீசனில் உலக நாயகன் கமல்ஹாசன் களமிறங்குகிறார். அண்மையில் புரமோ வெளியானது கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அதே வேளையில் கமல் ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 படத்தையும் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் கிரேன் விபத்து நிகழ்ந்து மூன்று தொழிலாளர்கள் மரணமடைந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இதனால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் போக பின் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க முடியாத சூழ்நிலையே இருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் படப்பிடிப்புகளை நடத்த ஏதுவான சூழல் நிலவுவகிறது. மேலும் வருகிறது 2021 ல் முதல் பாதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இடையிலும் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள காட்சிகளை துரிதமாக முடித்துவிட்டு வரும் ஜனவரியில் படத்தை வெளியிடலாம் என திட்டமிடுகிறாராம்.

காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here