மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

குடும்பத் தகராறில் இரண்டு மகள்கள் கண் முன்னே கணவன் உடற்பயிற்சி செய்யும் டம்பிள்சால் மனைவியை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூரைச் சேர்ந்த சீனு – மாதவி தம்பதிக்கு வயதுக்கு வந்த இரண்டு மகள்கள் உள்ளனர். சீனு ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கின் போது 24 மணி நேரமும் குடிப்பதையே முழு வேலையாக செய்து வந்த அவர், வீட்டிலேயும் குடிக்கத் தொடங்கினார்.

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் சீனு குடிப்பதை அவரது மனைவி மாதவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து சீனு குடித்துவிட்டு மனைவியை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையில் மாதவியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் அவர். பொறுமை இழந்த மாதவியின் பெற்றோர், போலீசில் புகாரளித்தனர். சீனு ஆந்திர மாநில அரசு பேருந்து ஓட்டுநர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பெயருக்கு விசாரணை நடத்தி அனுப்பியுள்ளனர்.

போலீஸ் புகாருக்கு பிறகு அவர் திருந்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் உடற்பயிற்சி செய்யும் தம்பிள்சை வைத்து மனைவியை கடுமையாக தாக்கினார்.

இந்த தாக்குதல் குறித்து மாதவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதுமட்டுமல்லாமல் சீனுவின் இரண்டு மகள்களும் அவர் தாக்குவதை வீடியோ எடுத்தனர். அதனை காவல்துறையினர் ஒப்படைத்துவிட்டனர். அதன்பிறகு தலைமறைவாக இருந்த சீனுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here