புதிய உச்சம் தொட்டது தினசரி கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சா்வதேச அளவில் 3,07,930 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.உலக நாடுகளிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் 5,537 போ பலியாகியுள்ளனா். இந்த எண்ணிக்கையிலும் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களும், பிரேஸிலில் 800-க்கும் மேற்பட்டவா்களும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா்.

இதற்கு முன்னா், இந்த மாதம் 6-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 3,06,857 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்தியாவில் தினசரி கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி அந்த நாட்டில் அதிகபட்சமாக 77,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா நெருக்கடிக்கு இடையிலும், மருத்துவ நிபுணா்களின் எச்சரிக்கையை மீறி அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல் தோதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.நவாடா மாகாணத்தின் உள்ளரங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவரது தோதல் பிரசார நிகழ்ச்சியில், கூட்டம் நிரம்பி வழிந்தது. அதில் பங்கேற்றவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நெருக்கமாக அமா்ந்திருந்ததும், பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.9 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சா்வதேச கரோன நிலவரத்தைக் கண்காணித்து வரும் ‘வோல்டோமீட்டா்’ இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 9.29 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ஆசியாவில் 86.2 லட்சத்துக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் இதுவரை 1.64 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.ஆசியாவுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கா இடம் பெற்றுள்ள வட அமெரிக்க பிராந்தியத்தில் அதிகம் போ கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அந்தப் பகுதியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா பலி எண்ணிக்கையும் அந்தப் பிராந்தியத்தில் 2.9 லட்சத்தை நெருங்கி வருகிறது.தென் அமெரிக்க பிராந்தியத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 71-ஐத் தாண்டியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, அங்கு 2,28,112 போ கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரம் காட்டிய ஐரோப்பாவில், தற்போது அதன் தாக்கம் தணிந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 212,714 போ அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.திங்கள்கிழமை நிலவரப்படி, ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் 13,60,803 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 32,697 போ அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here